அரசியல்வாதியாக மாறிய கேத்ரீனா தெரசா

201610191618171401_catherine-tresa-turn-to-politician_secvpfகோலிவுட் நடிகைகள் அரசியலுக்குள் நுழைவது ஒன்றும் புதிதான ஒன்று கிடையாது. அந்த வரிசையில் தற்போது ‘மெட்ராஸ்’, ‘கதகளி’, ‘கணிதன்’ ஆகிய படங்களில் நடித்த கேத்ரீனா தெரசாவும் அரசியல்வாதியாக மாறப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இவர் உண்மையில் அரசியல்வாதியாக மாறப்போவதில்லை. தெலுங்கு சினிமா ஒன்றில் அரசியல்வாதியாக நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ராணா டகுபதி, காஜல் அகர்வால், நவ்தீப் ஆகியோர் நடிக்கும் தெலுங்கு படமொன்றில் கேத்ரீனா தெரசா அரசியல்வாதியாக நடிக்கிறாராம்.

இந்த படத்தை தேஜா என்பவர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழ்நாட்டில் காரைக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. கேத்ரீனா தெரசா ஏற்கெனவே தெலுங்கில் வெளிவந்த ‘சரயனைடு’ படத்திலும் அரசியல்வாதியாக நடித்திருந்தார்.

தேஜா இயக்கும் இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் வலுவாக இருந்ததால் மீண்டும் அரசியல்வாதியாக அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online