ரோபோ இப்போது ரெமோ ஆனார்

201610191322502924_robo-now-remo_secvpfசிவகார்த்திகேயனைப் போல் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர்தான் ரோபோ சங்கர். இவரது இயற்பெயர் சங்கர் சின்னத்திரை காமெடி நிகழ்ச்சியில் ரோபோ போல் நடித்து பெயர் பெற்றதால் இவருடைய பெயரோடு ரோபோவும் இணைந்து கொண்டது. சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர், பெரிய திரைக்கும் அறிமுகமாகி சிறுசிறு வேடங்களில் காமெடியில் கலக்கி வந்தார்.

நிறைய படங்களில் நடித்திருந்தாலும், தனுஷ் நடிப்பில் வெளிவந்த ‘மாரி’ படம் இவருக்கு சினிமாவில் நிலையானதொரு இடத்தை பிடித்துக் கொடுத்தது. இதன்பிறகு, இவர் நடித்த படங்களில் இவருடைய காமெடி பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. தொடர்ந்து நிறைய படங்களில் கமிட்டாகியும் வருகிறார்.

இந்நிலையில், ‘ரெமோ’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்த நர்ஸ் கெட்டப்புடன் ரோபோ சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான கெட்டப்பா, அல்லது ரெமோ பற்றி ஏதாவது நிகழ்ச்சிக்காக இந்த கெட்டப்பை போட்டுள்ளாரா? என்பது தெரியவில்லை.

இருப்பினும், ரெமோ நர்ஸ் கெட்டப்பில் ரோபோ சங்கரை பார்ப்பதற்கு அழகாக இருப்பதாக அவரது புகைப்படத்தை பார்த்த அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries