விஜய் சேதுபதிக்கு ஜோடியான திரிஷா

201610211515368973_trisha-pairs-up-with-vijaysethupathi_secvpfதமிழ் சினிமாவில் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது ‘மோகினி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ‘சதுரங்கவேட்டை -2’ படத்திலும் நடிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து ‘கர்ஜனை’ என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், தற்போது விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை பிரேம் குமார் என்பவர் இயக்குகிறார். இவர் விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

திரிஷா இதுவரை முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் இணைவது இதுதான் முதல்முறை. இப்படம் மட்டுமில்லாது ஹரி இயக்கத்தில் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் திரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries