ஆரம்பத்திலேயே பட்டைய கிளப்பும் ‘பைரவா’ விஜய்

201610211200287246_bairavaa-vijay-pattaya-kelappu-in-starting_secvpfவிஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக விஜய் நடிக்கும் படங்களில் அவரது அறிமுக பாடல் பெரியளவில் வரவேற்பு பெறும். அந்த வகையில் படக்குழுவினரும் விஜய்யின் அறிமுக பாடலை மிகவும் பிரம்மாண்டமாகவும், அதேநேரத்தில் அனைவரையும் கவரும் வகையிலும் படமாக்குவர்.

அதேபோல், விஜய் தற்போது நடித்து வரும் ‘பைரவா’ படத்திலும் விஜய்யின் அறிமுக பாடலையும் மிகவும் பிரம்மாண்டமாக படமாக்கியுள்ளார்களாம்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்துள்ள இப்பாடலில் முதல் வரி தற்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ‘பட்டைய கிளப்பு, பட்டைய கிளப்பு பட்டி தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என்று இந்த பாடல் தொடங்குகிறது.

அறிமுக பாடலில் பட்டைய கிளப்ப வரும் விஜய்க்கு, மொத்தம் இந்த படத்தில் 5 பாடல்கள் உள்ளன. இதில் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இசைக்கு பெரிய எதிர்பார்ப்பு காத்திருக்கிறது.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சதிஷ், அபர்னா வினோத், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, ஸ்ரீமன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries