சிம்பு ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் விருந்து

201610221131137030_simbu-give-back-to-back-surprise-for-fans_secvpfஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. முதன்முறையாக சிம்பு மூன்று தோற்றங்களில் நடித்து வரும் இப்படத்தில் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தைத் தொடர்ந்து அஸ்வின் தாத்தா கதாபாத்திரத்திற்கான பர்ஸ்ட் லுக், டீசர் இவற்றுடன் ‘ட்ரெண்ட் சாங்’ எனத் தொடங்கும் ஒற்றைப்பாடல் ஒன்றையும் வெளியிடப் போவதாக சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இதுதவிர ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் டிரெய்லரை வெளியிடப் போவதாகவும் இது தனது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா- சிம்பு கூட்டணியில் வெளியான ‘லூசு பெண்ணே’, எவன்டி உன்ன பெத்தான்’ பாடல்கள் ஹிட்டடித்ததால் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தின் ‘ட்ரெண்ட் சாங்’ பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries