மதுர மைக்கேலை தொடர்ந்து அஸ்வின் தாத்தாவும் வெளிவந்தார்

201610231127027948_ashwin-thatha-getup-release-aaa-movie_secvpf-1சிம்பு மூன்று கெட்டப்புகளில் நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறது.

மூன்றாவது கதாநாயகி தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில், இப்படத்தில் சிம்பு நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்களும், அந்த கதாபாத்திரங்களுக்குண்டான கெட்டப்புகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில், மதுர மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் 80-களில் உள்ள கெட்டப்புடன் சிம்பு தோன்றும் இப்படத்தின் டீசர் வெளியானது.

இதைத் தொடர்ந்து அஸ்வின் தாத்தா என்ற கதாபாத்திரத்தில் முதுமையான தோற்றத்துடன் சிம்பு நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அவ்வப்போது புகைப்படங்களும் சிம்புவின் முகத்தை காட்டாதபடி வெளிவந்தது. இந்நிலையில், அஸ்வின் தாத்தாவுக்கென்று பிரத்யேகமாக பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த போஸ்டரில் சிம்பு ஒரு காரை தனது பலம் கொண்டு தூக்கிக் கொண்டிருக்க, பின்னால் தமன்னா அவரை வியப்புடன் கட்டிப்பிடித்தபடி இருப்பதுபோன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.

மதுர மைக்கேல் போன்று அஸ்வின் தாத்தா கெட்டப் போஸ்டரும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில், இந்த கெட்டப்புக்கான டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries