இயக்குனர் ராமின் தரமணி ரிலீஸ் தேதி அறிவிப்பு

201610231058420251_director-ram-tharamani-movie-release-date-announce_secvpfஐடி தொழிற்சாலைகளின் சொர்க்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது ‘தரமணி’. ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும் தரமணிக்கு இருக்கின்றது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாக கொண்டு இயக்குனர் ராம் இயக்கி வரும் புதிய படம் ‘தரமணி’. இப்படத்தில் அறிமுக நடிகர் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த டீசர் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், யுவன் இசையமைப்பில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களை வருகிற நவம்பர் 20-ந் தேதி வெளியிடவுள்ளனர். அதனைத் தொடர்ந்து டிசம்பர் 23-ந் தேதி படத்தை வெளியிடவுள்ளனர்.

‘தரமணி’ படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரித்து இருக்கிறார். காலம் சென்ற நா.முத்துக்குமார் இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதியுள்ளார். இப்படத்திற்காக இதுவரை யாரும் கண்டிராத, கேட்டிராத புதுமையான முறையில் விளம்பரங்கள் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries