தீபாவளியையொட்டி ராணுவ வீரர்களுக்கு அமீர்கான், சல்மான்கான், அக்‌ஷய் குமார் வாழ்த்து

201610261017430241_aamir-khan-salman-khan-akshay-kumar-diwali-greeting-for_secvpfதீபாவளியை முன்னிட்டு எல்லையில் போராடும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து சொல்லுமாறு பொது மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதற்காக சமூக வலைதளத்தில் பிரசார களத்தை ஏற்படுத்தினார். அதன்படி, இந்தி நடிகர்கள் அமீர்கான், சல்மான்கான் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் ராணுவ வீரர்களுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

51 வயது நடிகர் அமீர்கான் விடுத்த வாழ்த்து செய்தியில், “இது மிகவும் அற்புதமான அடையாளம். 125 கோடி இந்தியர்களின் ஆதரவும், நமது ராணுவ வீரர்களை அன்பினால் நிரப்பும். அனைவரும் ராணுவ வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

இதேபோல், 50 வயது நடிகர் சல்மான்கான் விடுத்த வாழ்த்து குறிப்பில், “என் தரப்பில் இருந்து இந்திய ராணுவ வீரர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அக்‌ஷய் குமார் ‘வீடியோ’ வாயிலாக ராணுவ வீரர்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து குறிப்பில், “உங்களால் தான் நாங்கள் பண்டிகைகளை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாட முடிகிறது. எங்களை யார் என்றே அறியாமல், எங்கள் மீது நீங்கள் (ராணுவ வீரர்கள்) அன்பாக இருக்கிறீர்கள். எங்களை பாதுகாக்கிறீர்கள். இந்த தீபாவளியை ராணுவ வீரர்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன். உங்களால் தான் நாங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries