டிரெயின் டு பூசான் – திரை விமர்சனம்

train-to-busan-reviewநாயகன் காங் யூ தனது மனைவியை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். வேலையில் பிசியாக இருப்பதால் தனது குழந்தையின் மீது அவரால் அதிக அக்கறை செலுத்த முடிவது இல்லை.

இதனால், அவரது குழந்தை தனது அம்மாவிடம் செல்லவேண்டும் என்று அவரிடம் அடம்பிடிக்கிறாள். ஒருகட்டத்தில் தனது குழந்தையை அவளது அம்மாவிடம் அழைத்துச்செல்ல காங் யூ முடிவெடுக்கிறார்.

அப்போது அந்த நகரத்துக்குள் ரசாயனம் கசிந்து மனிதர்கள் எல்லாம் மிருக மனிதர்களாக மாறுகிறார்கள். இது தெரியாமல் காங் யூவும் அவளது மகளும் ரெயில் பயணமாகிறார்கள். இவர்கள் பயணிக்கும் ரெயிலுக்குள்ளும் நிறைய பேர் மிருக மனிதர்களாக திரிகிறார்கள்.

மிருக மனிதர்களிடமிருந்து நாயகன் தனது குழந்தையை காப்பாற்றி மனைவியிடம் போய் சேர்த்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் காங் யூ ஒரு சுயநலவாதி. குடும்பத்திலும் சரி, வேலையிலும் சரி அவர் சுயநலமாகவே இருக்கிறான்.

ஒருகட்டத்தில் தனக்கு உதவி என்றால் தன்னை காக்க பலர் முயற்சி செய்வதை பார்க்கும், அவர் தன்னுடைய சுயநலத்தை தூற எறிந்துவிட்டு மற்றவர்களுக்காக எதிர்த்து போராடும்போது உண்மையிலேயே நம்மை பல யோசனைகளுக்குள் தள்ளுகிறது அவர் கதாபாத்திரம்.

படத்தில் நாயகனின் குழந்தையாக வரும் கிம் சூ ஆன் தனது நடிப்பால் பெரிதும் கவர்கிறாள். தனது அப்பா சுயநலமானவர் என்பதை அறிந்து அவரை உதாசீனப்படுத்தும் காட்சியிலும், பின்னர் அவர் மாறியதும் அவரிடம் அன்பு காட்டும் சமயத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாள்.

மிருக மனிதர்களிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளில் எல்லாம் மனதில் நமக்கும் பதைபதைப்பை ஏற்படுத்தியிருக்கிறாள்.

அதேபோல், கணவன், மனைவியாக வருபவர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நிறைமாத கர்ப்பிணியான மனைவி தனது கணவனை பற்றி மற்றவர்களிடம் சொல்லும் கிண்டல் பேச்சைக்கூட ஜாலியாக எடுத்துக் கொள்ளும் பேர்வழியான கணவன், கடைசியில் சாகும் தருவாயில் பிறக்கபோகும் தனது குழந்தைக்கு பேர் வைக்கும் காட்சிகளில் நம்மையும் கண்கலங்க வைத்துவிடுகிறார்.

படம் முழுக்க பெரும்பாலும் ரெயிலிலேயே படமாகியிருக்கிறார் இயக்குனர் யியோன் சாங் ஹோ. படத்தின் ஆரம்பத்தில் மெதுவாக நகரும் கதை, ரெயிலுக்குள் சென்றதும் ரெயிலைப் போலவே வேகமெடுக்கிறது.

விறுவிறுப்பான கதைக்குள் செண்டிமெண்ட் காட்சிகளும், கலகலப்பான காட்சிகளுக்கும் இடம்பிடித்திருப்பது சிறப்பு. ரெயிலுக்குள் ஷோம்பிகளிடமிருந்து தப்பிக்கும் கதைகள் நிறைய பார்த்திருந்தாலும், இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தருகிறது.

ஜாங் யங் க்யூவின் இசை படத்திற்கு விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது. லீ ஹியாங் டியோக்கின் ஒளிப்பதிவு, ஒளியமைப்பு அனைத்தும் கச்சிதமாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘டிரைன் டூ பூசன்’ வேகமெடுக்கும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries