மத்திய மந்திரியை ஈர்த்த ஏ.ஆர். ரகுமானின் இசை

201610291432285065_union-minister-ar-rahman-attracted-music_secvpfமத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி சில நாட்களுக்கு முன் மதுரை வந்து விட்டு டெல்லி திரும்புவதற்காக மதுரை ரெயில்நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, ரெயில்நிலையத்தில் தகவல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வழக்கமாக அறிவிப்புக்கு இடையே, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை ஒலிக்கப்படுவது வழக்கம்.

உமாபாரதி ரெயிலுக்காக காத்திருந்தபோது, இந்த பின்னணி இசை ஒலிக்கப்பட்டது. இதை ரசித்துக் கேட்ட அவர் சொக்கிப்போனார். உடனடியாக அந்த இசையை எனக்கு அனுப்பி வையுங்கள் என்று ரெயில்வே அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.

அந்த நேரம் பார்த்து ரெயில் வந்துவிடவே அவர் ரெயிலில் ஏறிச் சென்றுவிட்டார். டெல்லி போய்ச்சேர்ந்த அவர், மதுரையில் தான் விரும்பிக்கேட்ட அந்த இசை அடங்கிய குறுந்தகடை தனக்கு அனுப்பி வைக்குமாறு மதுரை கோட்ட ரெயில்வே மேலாளரிடம் கேட்டார். ஆனால், அவர் எந்த இசையை விரும்பி கேட்டார் என்பது ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

தகவல் அறிவிப்பை பொறுத்தமட்டில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள தகவல் மைய துணை ரெயில்நிலைய மேலாளரே தகவல் அறிவிப்புக்கும் பொறுப்பாவார். அவர் ஒரு குறிப்பிட்ட இசையை மட்டும் பதிவிறக்கம் செய்து மந்திரிக்கு அனுப்பி வைத்தார்.

ஆனால், தான் கேட்டு ரசித்த இசை இதுவல்ல என்று உமாபாரதி தெரிவித்துவிட்டாராம். இந்த சூழ்நிலையில் மத்திய மந்திரியை ஈர்த்த இசையைத் தேடி கடந்த 3 நாட்களாக அலைமோதி வந்த மதுரை கோட்ட ரெயில்வே வர்த்தக பிரிவு அதிகாரிகள் அறிவிப்பு மையத்தில் இருந்த இசை குறுந்தகடுகள் அனைத்தையும் பதிவு செய்து மந்திரிக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.

இதன் மூலம் மத்திய மந்திரியை கவர்ந்த ‘இசைப்புயல்’ விவகாரம் மதுரை ரெயில்வே வட்டாரத்தில் நேற்று அடங்கியது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries