படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்

201611021524529901_svsekar-advice-for-cinema-producers_secvpfகே.3 சினி கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. இதில் நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் பாடல்களை வெளியிட்டார். ‘யூடிவி’ தனஞ்ஜெயன், எஸ்.வி.சேகர் ஆகியோர் அதை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் எஸ்.வி.சேகர் பேசும் போது, “தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்.அப்படிப் போகும் போது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டி வரும். தேவையில்லாத பதட்டம் வரும். எனவே, சென்சாருக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள்.இன்று படமெடுப்பது சுலபம் .அதை வியாபாரம் செய்வது சிரமம். சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல்நாளே டி.வி.டி. கொண்டு வரலாம்.

இப்படத்தின் கதை எனக்குப் பிடித்திருந்தது. நான் என்றும் சிறு முதலீட்டுப் படங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். பல படங்கள் ஆரம்பித்து முடிக்க முடியாமல் நிற்பதைக் கேள்விப்படும்போது என்னால் அந்த வலியைத் தாங்க முடியாது. நானும் இப்படி பணத்தை இழந்தவன்தான்.

நானும் மகேந்திரனும் அப்பா மகன் போல இருந்தோம். எல்லாமே பகிர்ந்து கொண்டோம். நான் மிகவும் அனுபவித்து செய்த படம் இந்த ‘ திட்டிவாசல்’. அந்தப் படப்பிடிப்பு நாட்கள் எல்லாமே அழகான நாட்கள்.பெரிய படத்துக்காக அந்த நாட்களை விற்றிருந்தால் வாழ்க்கையில் இப்படி அழகான நாட்களை ,அற்புத அனுபவங்களை இழந்திருப்பேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries