மாறுபட்ட வேடங்களில் நடிக்க விரும்புகிறேன் – ஹன்சிகா

201611021308338549_would-like-to-play-different-roles-says-hansika_secvpf‘எங்கேயும் காதல்’, ‘ரோமியோ ஜூலியட்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹன்சிகா-ஜெயம் ரவி இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து இருக்கிறார். அந்த அனுபவம் பற்றி கேட்டபோது “நானும் ஜெயம்ரவியும் சேர்ந்து நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ரசிகர்களுக்கும் எங்களை பிடித்திருக்கிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் ‘போகன்’ படம் வித்தியாசமானது. அரவிந்த்சாமியுடன் முதல் முறையாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படக்குழு மிகவும் ஜாலியானது.

தமிழ் ரசிகர்கள் மிகவும் சிறந்தவர்கள். திறமையானவர்களுக்கு ஊக்கம் கொடுப்பார்கள். புதுமுகங்களை வரவேற்பார்கள். மிகவும் நல்லவர்கள். இதுபோன்ற ரசிகர்களை வேறு எங்கும் நான் பார்த்தது இல்லை. அவர்கள் விரும்புகிற நல்ல படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

இப்போது வரும் புதுமுகங்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். புதுமுகங்கள் அதிகமாக வருவதால் கவலை இல்லை. போட்டி இருந்தால்தான் திறமையை வளர்க்க முடியும். ரசிகர்கள் பாராட்டும் வகையில் வித்தியாசமாக நடிக்க வேண்டும். ரசிகர்கள் அதைத்தான் விரும்புவார்கள். சிறிது தாமதம் ஆனாலும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries