படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்: எஸ்.வி.சேகர்

201611031643188808_svsekar-advice-for-cinema-producers_secvpfகே.3 சினி கிரியே‌ஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. இதில் நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் பாடல்களை வெளியிட்டார். ‘யூடிவி’ தனஞ்ஜெயன், எஸ்.வி.சேகர் ஆகியோர் அதை பெற்றுக் கொண்டனர்.

விழாவில் எஸ்.வி.சேகர் பேசும் போது, “தயாரிப்பாளர்கள் படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்து விட்டு சென்சாருக்குப் போகாதீர்கள்.அப்படிப் போகும் போது அவர்கள் சொல்வதற்கு எல்லாம் தலையாட்ட வேண்டி வரும்.

தேவையில்லாத பதட்டம் வரும். எனவே, சென்சாருக்கு ஒரு மாதம் ஒதுக்குங்கள்.இன்று படமெடுப்பது சுலபம் .அதை வியாபாரம் செய்வது சிரமம். சின்ன படங்களுக்கெல்லாம் படம் வெளியாகும் முதல்நாளே டி.வி.டி. கொண்டு வரலாம்” என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries