மீண்டும் நடிக்க வந்த சுரேஷ் மேனன்

201611041340491462_suresh-menon-return-to-kollywood_secvpfஇயக்குனர் சுரேஷ் மேனன் யாரென்று நம்மில் பலருக்கும் தெரியாது. இவர் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரேவதியின் முன்னாள் கணவர். பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் மேனன், ரேவதி படங்களில் பணியாற்றியபோது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின், ரேவதி கதாநாயகியாக நடித்த ‘புதிய முகம்’ படத்தை தயாரித்து இயக்கி அதில் நடிக்கவும் செய்திருந்தார். அதன்பின், அரவிந்த்சாமி, அஜித் மற்றும் பலர் நடித்த ‘பாசமலர்கள்’ படத்தையும் தயாரித்து இயக்கினார். இரண்டு படங்களும் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றது.

சினிமா வாழ்க்கை வெற்றியைக் கொடுத்தாலும், நிஜ வாழ்க்கையில் சுரேஷ் மேனன் தோற்றுதான் போனார். சில மனவருத்தங்களால் ரேவதியும், சுரேஷ் மேனனும் பத்து வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்டனர். அதன்பின், சுரேஷ் மேனன் திரையுலகை விட்டுவிட்டு ஓட்டல் பிசினசில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

இந்நிலையில், சுரேஷ் மேனன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் சுரேஷ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பவருக்கு எந்தவித இமேஜும் இருக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்த விக்னேஷ் சிவன், அவரைத் தேடிக் கண்டுபிடித்து இதில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 9-ந் தேதி தொடங்குகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries