சசிகுமாரின் புதிய படம் பலே வெள்ளையத் தேவா

201611061008131548_sasikumar-new-movie-bale-vellaiya-thevaa_secvpfசசிகுமார் ‘கிடாரி’ படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருநதார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தேனியில் தொடங்கியது. இதில், சங்கிலி முருகன், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். தர்புகா சிவா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது இப்படத்திற்கு ‘பலே வெள்ளையத் தேவா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்பதை இதுவரை படக்குழு அறிவிக்கவே இல்லை.

இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரேகட்டமாக எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தை கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமாரே தயாரிக்கிறார்.

கோவை சரளாவின் கதாபாத்திரம் இப்படத்தில் சசிகுமாருக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இப்படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries