கவுதம் கார்த்திக் நடிக்கும் ஹர ஹர மஹா தேவகி

201611071345256940_gautham-karthik-act-hara-hara-maha-devaki_secvpfகவுதம் கார்த்திக் தற்போது ‘முத்துராமலிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து புதுமுக இயக்குனர் சந்தோஷ் பீட்டர் ஜெயக்குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு ‘ஹர ஹர மஹா தேவகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

‘ஹர ஹர மஹா தேவகி’ என்ற தலைப்பு ஒருகாலத்தில் சமூக இணையதளங்களில் வைரலான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை தங்கம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது.

இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் எளிமையாக நடந்தது. இப்படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். பாலமுரளி இசையமைக்கும் இப்படத்திற்கு செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். அடுத்த வருடம் இப்படம் வெளிவரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries