எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீளவேண்டும்: கமல்

201611081315231416_to-meet-expectations-my-cine-life-has-to-prolong-kamal_secvpfதமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று திரையுலகில் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் கமல். இவர் திரையில் செய்த சாதனைகள் ஏராளம். அதேபோல் சினிமாவில் நடிகர், கதாசிரியர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டனர். இவருக்கு நேற்று 63-வது பிறந்தநாள்.

கமலின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது ரசிகர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்து அதை ஒரு பெரிய விழாவாக எடுத்துக் கொண்டாடுவார்கள்.

கமலும் தனது பிறந்தநாளின் போது ரசிகர்களை சந்திப்பது வழக்கம். இந்த ஆண்டு, முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, ரசிகர்களும் அவரது வேண்டுகோளை ஏற்று கமலின் பிறந்தநாளை தவிர்த்தனர். இருப்பினும், சமூக வலைத்தளங்களில் கமலுக்கு ஏராளமானோர் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்களுக்கு கமல் நன்றி தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறும்போது, அன்பு ரசிகர்களுக்கும் மனமுவந்து வாழ்த்திய சக கலைஞர்களுக்கும் மேலும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். எதிர்பார்ப்புகளை ஈடுகட்ட என் கலை வாழ்வு நீள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries