ரஜினியை தொடர்ந்து மோடியை பாராட்டிய கமல்

201611091727331317_kamal-salute-for-modi-after-rajini-wish_secvpfபிரதமர் நரேந்திர மோடி நேற்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு காட்டுத்தீ போல நாடெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் இதைப்பற்றிய பேச்சுத்தான் இருக்கிறது. மோடியின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தாலும், பலரும் பாராட்டி வருகின்றனர்.

நடிகர்கள் ரஜினி, விஷால், தனுஷ் உள்ளிட்டோர் பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், கமலும் பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சல்யூட் மிஸ்டர் மோடி. இந்த நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கொண்டாட வேண்டும். குறிப்பாக, நேர்மையாக வரி கட்டுபவர்கள் என்று கூறியுள்ளார்.

விஷால் கூறும்போது, இதை ஏற்றுக்கொள்ள கொஞ்ச காலமாகும். புதிய இந்தியாவை கொண்டு வாருங்கள் மோடிஜி என்று கூறியுள்ளார். சித்தார்த் கூறும்போது, டியர் மோடி, நீங்கள் ஒரு ஜாம்பவான். தேசப்பக்தி உள்ள அனைத்து இந்தியனும் இன்று இரவு நன்றாக தூங்குவான். இந்த நாளுக்காக நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், லட்சுமி ராமகிருஷ்ணன், தனுஷ் உள்ளிட்டோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கோலிவுட் மட்டுமில்லாது, டோலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகினரும் மோடியின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online