ஒரே நாள் இரவில் மோடி அனைவரையும் ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார்: மன்சூர் அலிகான் பேச்சு

201611121329077807_modi-made-overnight-beggar-mansoor-ali-khan-speech_secvpfமைமோசா நிறுவனம் தயாரிப்பில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் ‘கொஞ்சம் கொஞ்சம்’ உதய சங்கரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை பெட்டி சி.கே.பி.ஆர். மோகன் தயாரித்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. விழாவில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டு பேசியதாவது:-

இந்த படத்தை மலையாள பட உலகை சேர்ந்தவர்கள் தயாரித்து இருக்கிறார்கள். நமது கலைஞர்கள் தெலுங்குபட உலகுக்கு சென்று வெற்றி பெற்றது போல இவர்களும் மிகப் பெரிய வெற்றியை பெற வேண்டும். இந்த படத்தில் நானும் நடித்திருக்கிறேன். அற்புதமான படம். என்னை அழகாக காட்டி இருக்கிறார்கள்.

இன்று காலை நான் வேறு ஒரு படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். கலைஞர்களுக்கு சம்பளம் கொடுக்க வங்கியில் சென்று பணத்தை மாற்ற வேண்டியது இருப்பதால் காலையில் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டனர். எனவே நான் இங்கு வந்தேன்.

கருப்பு பணத்தை ஒழிப்பதை அனைவரும் வரவேற்கிறார்கள். ஆனால் முன் ஏற்பாடுகள் எதையும் செய்யாமல் பிரதமர் மோடி இரவோடு இரவாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்து பெறும் பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறார்.

அனைவரையும் ராப்பிச்சைக்காரன் ஆக்கி விட்டார். சில்லரை நோட்டுக்காக பொதுமக்கள் வீதி வீதியாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் நாள் முழுவதும் காத்துக்கிடக்கிறார்கள்.

பணம் இல்லாததால் சினிமா தியேட்டர்களுக்கு யாரும் செல்லவில்லை. 5 நாட்களாக தியேட்டர்கள் காலியாக கிடக்கின்றன. சினிமா துறையே முடங்கி விட்டது. இதற்கு திரை உலகினர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், கலைஞர்கள் அனைவரும் எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். போராட வேண்டும்.

சினிமா துறை நொடிந்து விட்டது. படத்தை ஓட வைக்க வேண்டும் என்பதற்காகத் தான் இசை வெளியீட்டு விழாக்களை எல்லாம் பெரும் தொகை செலவழித்து நடத்துகிறார்கள். வருமானமே நின்று போனால் நமது நிலை என்ன ஆவது? எனவே இதற்கு சரியான தீர்வு காணவேண்டும்.

2 ஆயிரம் ரூபாய் நோட்டு என்று ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். நான்கு தடவை பாக்கெட்டில் வைத்தால் கிழிந்துவிடும். அவ்வளவு மோசமாக இருக்கிறது. நமது ஆர்ட்டிஸ்டுகளிடம் ஆலோசனை கேட்டால் கூட இதை விட நல்ல நோட்டு கிடைத்திருக்கும்.

இவ்வளவு மோசமான நாட்களை இதுவரை பார்த்தது இல்லை. மக்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. சினிமாவின் நிலை மோசமாகி விட்டது. இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு மன்சூர் அலிகான் பேசினார்.

இயக்குனர் சீனுராமசாமி, பேசும்போது, கொஞ்சம் கொஞ்சம், படம் சிறந்த படமாக உருவாகி இருக்கிறது வெற்றி பெறும் என்றார்.

நிகழ்ச்சியில் இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், குகநாதன், சுசீந்தரன், இசை அமைப்பாளர் வல்லவன், ஜாக்குவார் தங்கம், ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries