யாரையும் நான் காதலிக்கவில்லை: நிக்கி கல்ராணி

201611141552013399_i-dont-love-with-anybody-actress-nikki-galrani_secvpfநிக்கிகல் ராணி நடித்த ‘கடவுள் இருக்கான்குமாரு’ படம் வருகிற 17-ந்தேதி திரைக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து ‘மொட்டசிவா கெட்டசிவா’, ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹர மகா தேவகி’ படங்களில் நடிக்கிறார். இதுபற்றி கூறிய நிக்கிகல்ராணி….

“தமிழ் சினிமாவில் எனது பயணம் நன்றாக இருக்கிறது. மற்றவர்கள் யோசிக்கும் பாத்திரங்களில்கூட நான் நடிக்கிறேன். இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பதில் எந்த தயக்கமும் இல்லை.

காதல் காட்சிகளில் நடிப்பது தான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இதுவரை என்னுடன் நடித்த நடிகர்களில் யார் சிறந்தவர் என்று தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாது. என் ‘ரோல்மடல்’ இவர் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட முடியாது.

படப்பிடிப்பு தளத்தில் நான் எப்போதும் கலகலப்பாக இருப்பேன். எல்லோரும் என்னை ரவுடிப்பெண் என்று தான் அழைப்பாளர்கள். ஜி.வி.பிரகாஷ் மிகவும் பயந்த சுவாபம் உள்ளவர். அமைதியாக இருப்பார்.

காதல் உணர்வுப்பூர்வமானது. எல்லோருடைய வாழ்க்கையிலும் காதல் வரும். அந்த நேரம் எனக்கு வரவில்லை. இப்போது நான் சினிமாவையும் என் குடும்பத்தையும் மட்டுமே காதலிக்கிறேன்” என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries