500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது விவகாரம்: சைத்தான் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

201611141244284257_vijay-antony-saitan-movie-release-date-postponed_secvpfகடந்த 8-ந் தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

தங்களுடைய அத்தியாவசிய பிரச்சினைகளுக்கே பணம் போதாததால் மக்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் பெரிதாக அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை. இதனால், தியேட்டர்களில் மக்கள் கூட்டம் ரொம்பவும் குறைவாகவே காணப்படுகிறது. தியேட்டர் நிர்வாகமும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வாங்க மறுப்பதால் பெரும்பாலான மக்கள் தியேட்டருக்கு வந்து திரும்பிச் சென்ற வண்ணம் இருக்கின்றனர்.

இந்நிலையில், இந்த பிரச்சினையால் படங்களை வெளியிடுவதிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த பிரச்சினை முடியும்வரை படங்களை வெளியிடுவதில் கோலிவுட் தயக்கம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் கடந்த வாரம் வெளியாவதாக இருந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் ரிலீசாகாமல் தள்ளிப்போனது. அதேபோல், இந்த வாரம் வெளியாவதாக இருந்த ‘சைத்தான்’ படத்தையும் படக்குழுவினர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ளார். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்ற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். அருந்ததி நாயர் இப்படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். ஆரா சினிமாஸ் நிறுவனம் இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online