சபர்ணாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது: தந்தை பேட்டி

201611141013509761_actress-sabarna-death-in-suspected-father-interview_secvpfசபர்ணாவின் மரணம் குறித்து அவரது தந்தை அனந்தகுமார் கண்ணீர் மல்க நிருபர்களிடம் கூறியதாவது:-

தெலுங்கு, மலையாளம் என நிறைய தொடர்களில் சபர்ணா நடித்து வந்த போதிலும் தமிழில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த சபர்ணா சிறிது காலத்துக்கு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்திருந்தார்.

தைரியமான பெண் என்பதால் நாங்களும் அவளது விருப்பத்துக்கு எந்தவிதமான தடையும் தெரிவிக்கவில்லை. பின்னர் தொழில் துவங்குவதற்காக சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்ற சபர்ணா மீண்டும் தொழில் விஷயமாக டெல்லிக்கு செல்ல இருப்பதாக கூறியிருந்தார்.

தனியாக தங்கியிருந்தாலும் சபர்ணா எங்களுடன் தினமும் செல்போனில் பேசுவார். ஆனால் கடந்த 3 நாட்களாக அவரிடம் இருந்து எந்தவித தகவலும் வரவில்லை.

ஒரு வேளை டெல்லிக்கு சென்றிருப்பார் அதனாலேயே அவர் பேசவில்லை என்று நாங்கள் நினைத்திருந்தோம். அதன் பின்னரே போலீசார் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது மரணத்தில் என்ன நடந்திருக்கும் என்று தெரியவில்லை.

அவரது அறையில் சிகரெட் துண்டுகளும், மதுபாட்டில்களும் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். அதுவே எங்களுக்கு சபர்ணாவின் மரணத்தில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அவளுக்கு எந்தவித தீய பழக்கங்களும் கிடையாது. மேலும் அவளது செல்போனையும் காணவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது சபர்ணாவுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கி இருந்தோம். இந்த நிலையில் அவளது மரணம் மிகுந்த மனவேதனை அளித்துள்ளது. இதனையடுத்து சபர்ணாவின் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries