கணவரை விவாகரத்து செய்ய முடிவா? வித்யாபாலன் விளக்கம்

201611170847113938_decision-to-divorce-your-husband-vidya-balan-description_secvpfமறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வேடத்தில் ‘த டர்ட்டி பிக்சர்’ படத்தில் நடித்து பிரபலமானவர், வித்யாபாலன். இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் அவருக்கு கிடைத்தது. குரு, உருமி போன்ற தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பயங்கரவாதியான கணவனை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் வித்யாபாலன் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ படம் தமிழில் நயன்தாரா நடித்து ‘அனாமிகா’ என்ற பெயரில் வெளிவந்தது.

வித்யாபாலனுக்கும் தொழில் அதிபர் சித்தார்த் ராய் கபூருக்கும் 2012-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். சந்தோஷமாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில், இப்போது புயல் வீசத்தொடங்கி உள்ளதாகவும், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து இருப்பதாகவும் இந்தி பட உலகில் தகவல்கள் பரவின. விரைவில் இருவரும் விவாகரத்து செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே இந்தி நடிகர்-நடிகைகள் பலர் விவாகரத்து செய்து பிரிந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விவாகரத்து வதந்திக்கு வித்யாபாலன் தற்போது விளக்கம் அளித்து உள்ளார். அவர் கூறியதாவது:-

“நானும் எனது கணவரும் விவாகரத்து செய்து பிரியப்போவதாக தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இதை பார்க்கும்போது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நான் சினிமாவில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருந்தபோது திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு ஐக்கியமாகி விட வேண்டும் என்று சிந்திக்கவே இல்லை. சித்தார்த் ராய் கபூரை சந்தித்த பிறகுதான் திருமணத்தின் மீது ஆசை வந்தது.

திருமணத்துக்கு பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. மற்ற கணவன் மனைவிபோல் நாங்கள் இல்லை. விருந்து விழாக்களில் ஜோடியாக கலந்து கொள்வது கிடையாது. மற்றவர்கள் போல் ஜோடியாக நின்று ‘செல்பி’ எடுத்து டுவிட்டரில் போடுவதும் இல்லை. கைகோர்த்துக்கொண்டும் இடுப்பில் கைபோட்டுக்கொண்டும் போவது இல்லை. இதனால்தான் நாங்கள் பிரியப்போகிறோம் என்று கூச்சல் போடுகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை.”

இவ்வாறு வித்யாபாலன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries