ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாமல் போனதால் எனக்கு பாதிப்பு இல்லை: அமீர்கான்

201611211005573781_not-affect-rs-500-1000-invalid-notes-aamir-khan-says_secvpf500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை நடிகர்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட இந்தி திரையுலக பிரமுகர்கள் பலர் வரவேற்று உள்ளனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அரியானா மாநிலம் பலாலி என்ற கிராமத்துக்கு நேற்று சென்றிருந்த இந்தி நடிகர் அமீர்கானிடம், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “என்னைப் போன்ற பிரபலங்கள் ஏதாவது பேசுவதற்கே பயமாக இருக்கிறது. நாங்கள் ஏதாவது சொன்னால் வேறொரு அர்த்தத்தில் எடுத்துக் கொள்கிறார்கள்” என்றார்.

என்றாலும், தனது பணம் முழுவதும் வங்கியில் இருப்பதாலும், பணப்பரிவர்த்தனைகளை காசோலைகள் மூலமே செய்து கொள்வதாலும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries