கர்நாடக இசை மேதை பால முரளி கிருஷ்ணா உடலுக்கு கமல்ஹாசன் அஞ்சலி

201611231442031392_kamalhassan-tribute-to-bala-muralai-krishna_secvpfகர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது- 86. மரணம் அடைந்த பால முரளி கிருஷ்ணாவுக்கு அன்னபூரணி என்ற மனைவியும், அபிராம், சுதாகர், வம்சி மோகன் ஆகிய மகன்களும், சூர்யகாந்தி, லட்சுமி, மஹதி ஆகிய மகள்களும் உள்ளனர்.

சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பால முரளி கிருஷ்ணா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

தகவல் அறிந்ததும், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன், ம.தி.மு.க பொதுசெயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூ. மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இசை அமைப்பாளர் இளையராஜா,நடிகர் சிவக்குமார், கார்த்திக் ராஜா, பாடகர் டி.எம்.கிருஷ்ணா, பாடகிகள் சுதா ரகுநாதன், நடிகை வைஜெயந்தி மாலா, வீணை ராஜேஷ் வைத்தியா உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினார்கள்.

நடிகர் கமல்ஹாசன் இன்று பால முரளி கிருஷ்ணா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாலமுரளி கிருஷ்ணா மிகப்பெரிய சாதனையாளர். அவருடைய மறைவு பெரிய இழப்பு. அவரை சந்திக்க, பாடல்களை வாங்கிச்செல்ல பலமுறை இங்கு வந்திருக்கிறேன். அவரது இசை என்றும் வாழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு, மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் நடராஜ், கர்நாடக இசை பாடகி நித்ய ஸ்ரீ மகாதேவன், பாடகிகள் ரஞ்சனி, காயத்ரி, வாணி ஜெயராம், பாடகர் மனோ, இயக்குனர் வசந்த் உள்பட ஏராளமானோர் இன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, மற்றும் அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் விஷால், தனுஷ் உள்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries