மதன் வழக்கை விசாரிக்க 2 கூடுதல் துணை கமிஷனர்கள் நியமனம்

201611260814367725_2-additional-deputy-commissioners-appointed-investigate-case_secvpfபட அதிபர் மதன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவரிடம் 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடக்கிறது. அவர் மீதான வழக்கை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். அவருக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள மதனுக்கு நேற்று ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

அவரை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரித்தனர். மோசடி செய்த பணத்தை மதன் எங்கெங்கு? முதலீடு செய்துள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடந்து வருவதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries