மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் நடனம் ஆடும் ராகவா லாரன்ஸ்

201611281120400090_raghava-lawrence-dance-with-handicapped-students-in_secvpfநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என சினிமாவில் பன்முகம் கொண்டு விளங்கும் ராகவா லாரன்ஸ், பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையில் முன்னேற வழிவகை செய்து வருகிறார்.

இவர் அவ்வப்போது தனது மாற்றுத்திறனாளி மாணவர்களை தனது படங்களிலும் டான்ஸ் ஆட வைத்து அவர்களுக்கு அடையாளத்தையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறார். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ‘காஞ்சனா’ படத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். தெலுங்கு படங்களிலும் தனது மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார்.

இந்நிலையில், ராகவா லாரன்ஸ் தற்போது நடித்து வரும் ‘சிவலிங்கா’ படத்தின் அறிமுக பாடலுக்கு மாற்றுத் திறனாளி மாணவர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து நடனம் ஆடப்போவதாக ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது படமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

‘சிவலிங்கா’ படத்தை பி.வாசு இயக்கி வருகிறார். சக்தி வாசுதேவன், ரித்திகா சிங், வடிவேலு, ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். எஸ்.தமன் இசையமைக்கிறார். கன்னடத்தில் பி.வாசு இயக்கிய ‘சிவலிங்கா’ படமே தமிழிலும் ‘சிவலிங்கா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries