அமெரிக்காவின் மிகப்பெரிய ஸ்டுடியோவில் தொடங்கும் விஜய் – அட்லி படம்

201611291635191581_vijay-atlee-movie-start-in-american-warner-brothers-studios_secvpfவிஜய் தற்போது ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த பிறகு அட்லியின் இயக்கத்தில் விஜய் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கப் போவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. இந்நிலையில், அடுத்த வருடம் பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாக படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை கலிபோர்னியாவில் உள்ள மிகப்பெரிய வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் நடத்தவுள்ளனர். ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களான ‘லைட்ஸ் அவுட்’, ‘கான்ஜுரிங் 2’, ‘பேட்மேன் vs சூப்பர் மேன்’, ‘காட்ஸில்லா’, ‘ஹாரிபாட்டர்’, ‘இன்செப்சன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவின் பங்களிப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், தற்போது வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோவில் படமாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையை விஜய்-அட்லி படம் பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.

விஜய் – அட்லி இணையும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமெரிக்காவில்தான் படமாக்கவுள்ளார்களாம். ‘பைரவா’ படத்தின் டப்பிங் முடிந்ததும் விஜய் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லவிருக்கிறார். அவர் திரும்பி வந்தபிறகு இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் கூடிய விரைவில் அறிவிப்பார்கள் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries