சங்கத்தை புதுப்பித்து தரக்கோரி அமைச்சரிடம், திரைப்பட இயக்குனர்கள் மனு

201611301123065476_union-reinvented-filmmakers-petition-to-minister_secvpfதமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி, தலைவர் விக்கிரமன், மற்றும் கே.எஸ்.ரவிகுமார், ரமேஷ்கண்ணா ஆகியோர் சென்னை கோட்டையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், தொழிலாளர் நலத்துறை செயலாளர் அமுதா ஆகியோரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுடைய திரைப்பட இயக்குனர்கள் சங்க அலுவலகம் வடபழனி குமரன் நகரில் செயல்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகத்தை வளசரவாக்கத்திற்கு இடமாற்றம் செய்துவிட்டோம். இதனால் சங்கத்தை புதுப்பிப்பது தொடர்பான கடிதம் பழைய முகவரிக்கு சென்றதால் எங்கள் கவனத்துக்கு வராமலே இருந்துவிட்டது.

இதனால் சங்கத்தை புதுப்பிக்க முடியாமல் போய்விட்டது. தற்போது புதிய முகவரியில் செயல்படும் எங்கள் சங்கத்தை புதுப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்,

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries