என்னை வியக்க வைத்த ரஜினிகாந்த்: எமிஜாக்சன்

201612010919232099_rajinikanth-that-surprised-me-emi-jackson_secvpfமதராச பட்டனம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் எமிஜாக்சன். தாண்டவம், ஐ, தங்க மகன், கெத்து, தெறி ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்கிறார்.

இந்தி நடிகர் சல்மான்கானுடன் எமிஜாக்சனுக்கு நெருக்கம் ஏற்பட்டு உள்ளதாகவும் இருவரும் தனிமையில் சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் வந்துள்ளன. ரஜினிகாந்துடன் நடித்த அனுபவம், சல்மான்கான் கிசுகிசுக்கள் பற்றி மும்பையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற எமிஜாக்சனிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

“ரஜினிகாந்துடன் 2.0 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். அந்த படத்தின் முதல் தோற்றத்தை வெளியிடும் நிகழ்ச்சியை சமீபத்தில் மும்பையில் நடத்தி முடித்தனர். அந்த விழாவுக்கு செல்வதற்கு முன்னால் நானும் ரஜினிகாந்தும் ‘2.0’ படப்பிடிப்பில் முக்கிய காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டு இருந்தோம்.

அப்போது அவரிடம் ‘2.0’ படவிழாவில் கலந்து கொள்ளப்போவதை நினைத்து நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், ‘எமி நான் நிஜமாகவே அந்த விழாவை நினைத்து மிகவும் பதற்றமாக இருக்கிறேன். ஊடகங்கள் கவனிக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்ளும்போதெல்லாம் இந்த பதற்றம் எனக்கு வந்து விடுகிறது.’ என்றார். நான் அவரிடம், நீங்கள் ஒரு சூப்பர் ஸ்டார். எனவே அப்படி பதற்றப்படக்கூடாது என்றேன்.

அதற்கு அவர் அது உண்மைதான். ஆனாலும் எனக்கு பதற்றம் வருகிறது என்றார். இதன்மூலம் ரஜினிகாந்த் எந்த அளவுக்கு பணிவான மனிதர் என்பதை அறிய முடியும். எல்லோரிடமும் ஆத்மார்த்தமாக பழகுவார். அவருடைய பணிவான நடவடிக்கைகளை பார்த்து நான் வியந்து போகிறேன்.

சல்மான்கானை எல்லோருக்குமே பிடிக்கும். நான் யாரையும் காதலிக்கவில்லை. இந்தியில் கட்டுக்கோப்பாக உடலை வைத்துள்ள நடிகர் யார் என்று கேட்டால் அக்‌ஷய்குமார் என்பேன். அவர் உடலை நன்றாக வைத்துக்கொள்ள கடும் உடற்பயிற்சிகள் செய்கிறார்.”

இவ்வாறு எமிஜாக்சன் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries