ஜெயம் ரவி-அமீர்கானுடன் நேரடியாக மோதும் சூர்யா

201612031337038018_suriyas-s3-release-date-postponed-december-23_secvpfசூர்யா, சுருதி ஹாசன், அனுஷ்கா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எஸ் 3’. ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ படங்களின் வெற்றியைத் தொடர்ந்து ஹரி-சூர்யா இருவரும் மீண்டும் இப்படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் படக்குழு மாற்றம் செய்துள்ளது.

அதன்படி வருகின்ற டிசம்பர் 23-ம் தேதி ‘எஸ்3’ வெளியாகிறது. அதே நாளில் ஜெயம் ரவி-அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘போகன்’, சசிகுமாரின் ‘பலே வெள்ளையத்தேவா’, விக்ரம் பிரபுவின் ‘வீர சிவாஜி’, பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ அமீர்கானின் ‘டங்கல்’ ஆகிய படங்கள் வெளியாகின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் மேலே சொன்ன ஆறு படங்களுக்கும் இடையே பாக்ஸ் ஆபிசில் கடுமையான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries