13 நாட்களில் ரூ.300 கோடியை வசூலித்தது அமீர்கானின் ‘தங்கல்’

நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் ‘தங்கல்’. கிறிஸ்துமஸ் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியான இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக இப்படத்தில் அமீர்கானின் நடிப்பும், படத்தின் திரைக்கதையும் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வெகுவாகப் பாராட்டுப்படுகிறது. இந்நிலையில் வெளியான 13 நாட்கள் முடிவில் ‘தங்கல்’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.300 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இதற்கு முன் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’, ‘பஜ்ரங்கி பைஜான்’ அமீர்கான் நடிப்பில் வெளியான ‘பிகே’ ஆகிய படங்கள் 300 கோடியை வசூலித்து சாதனை படைத்திருந்தது. இதன் மூலம் 300 கோடி கிளப்பில் இணைந்த நான்காவது பாலிவுட் திரைப்படம் என்ற பெருமை ‘தங்கல்’ திரைப்படத்துக்குக் கிடைத்திருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online