தனுஷின் ‘வட சென்னை’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘புரியாத புதிர்’ பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது. இதுதவிர ‘கவண்’, ‘கருப்பன்’, ‘விக்ரம்-வேதா’, ’96’, ‘அநீதி கதைகள்’ உள்ளிட்ட அரை டஜன் படங்களில் விஜய் சேதுபதி தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் ‘வட சென்னை’ படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் தனுஷின் கால்ஷீட் பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெற்றிமாறன் தனுஷுக்காக காத்திருப்பதால் இப்படத்துக்காக விஜய் சேதுபதி பலமுறை கால்ஷீட் கொடுத்தும் அவரின் கால்ஷீட் தேதிகள் வீணாகி விட்டதாகவும், இதனால் தான் இப்படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தனுஷின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த வெற்றிமாறன் தற்போது ஜி.வி.பிரகாஷை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online