சிம்பு படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அனிருத்(சிறப்பு)!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். முதன்முறையாக 3 வேடத்தில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடித்து வருகின்றனர். மைக்கேல் ராயப்பன் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி சிம்பு எழுதி பாடிய ‘டிரெண்ட் சாங்’கை படக்குழு வெளியிட்டது. சமூக வலைதளங்களில் டிரெண்ட்டான இந்த பாடலின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு செட்டுக்கு நேராக வந்த இசையமைப்பாளர் அனிருத், சிம்பு மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்து, ‘ஏஏஏ’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் அனிருத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online