பிரபுதேவா படத்தில் வெளியாகவுள்ள இந்தியாவின் முதல் “பாலிண்ட்ரோம் சாங்”!

இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த விக்டர் ஜெயராஜ் தற்போது ‘வினோதன்’ படத்தை இயக்கி வருகிறார். பிரபு தேவாவின் பிரபுதேவா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஐசரி கணேசின் மகன் வருண் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

வருணுக்கு ஜோடியாக ‘பரதேசி’ புகழ் வேதிகா நடிக்கிறார். மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாழ்க்கை குறித்து எடுக்கப்பட்டு வரும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி பாடல்களை எழுத டி.இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில், இமான்-மதன் கார்க்கி இணைந்து ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டுள்ளனர். அதாவது, ஒரு பாடலை முழுவதுமாக பாலிண்ட்ரோம் வார்த்தைகளைக் கொண்டு மதன் கார்க்கி எழுதியுள்ளார். உதாரணமாக “MADAM” “விகடகவி” “தாத்தா”, “பாப்பா”, “காக்கா”, “மாமா”, “குடகு” உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தி பாட்டு எழுதப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே பாலிண்ட்ரோம் முறையில் பாட்டு வெளியாவது இதுவே முதல் முறை. மேலும் இந்த பாடலையும் பாலிண்ட்ரோம் முறையிலேயே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதாவது இன்று “7-1-17” மாலை “7:1:17” மணியளவில் “டூபாடூ” இணையதளத்தில் பாடல் வெளியிடப்பட உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries