பாஸ்ஸெஞ்சர்ஸ் – திரை விமர்சனம்

ஹோம்ஸ்டெட் என்ற நிறுவனம் ‘தி குளோனி வேர்ல்ட் ஆப் ஹோம்ஸ்டெட்’ என்ற உலகத்தை உருவாக்குகின்றனர். இந்த உலகத்திற்கு யார் வேண்டுமானாலும் செல்லலாம் என ஹோம்ஸ்டெட் நிறுவனம் கூறுகிறது.

இதனைத் தொடர்ந்து கதாநாயகன் கிறிஸ் பிராட், கதாநாயகி ஜெனிஃபர் லாரன்ஸ் உட்பட கம்பெனியின் 258 ஊழியர்களுடன், 5000 பயணிகள் விண்கலமொன்றில் அந்த உலகத்துக்கு பயணம் செய்கின்றனர்.

அந்த உலகத்துக்கு பயணம் செய்ய 120 ஆண்டுகள் ஆகுமென்பதால் விண்கலத்தில் பயணம் செய்யும் அனைவரும், விண்வெளித் தூக்கத்துக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள்.

(இந்த விண்வெளித் தூக்கத்தால் 120 ஆண்டுகள் பயணம் செய்தாலும் தூங்கி அடுத்த நாள் எழுந்தது போல இருக்கும்). பயணத்தின் இடையில் கதாநாயகன் கிறிஸ் பிராட்டுக்கு திடீரென விழிப்பு வந்துவிடுகிறது.

விண்கலத்தில் இருக்கும் கணினி நாம் செல்ல வேண்டிய இடம் வந்துவிட்டது. பயணத்துக்கான ஆயத்தங்களை செய்து கொள்ளுங்கள் எனக் கூறுகிறது. இதனை நம்பி கிறிஸ் பிராட்டும் தனது வேலைகளைத் தொடர்கிறார்.

ஆனால் விண்கலத்தில் பயணிக்கும் மற்ற யாரும் தங்களது உறக்கத்தில் இருந்து விழிக்கவில்லை. இதனால் கிறிஸ் பிராட்டுக்கு சந்தேகம் வந்து இதற்கான காரணத்தை ஆராய்கிறார். அப்போது 90 ஆண்டுகளுக்கு முன்பே தான் எழுந்துவிட்ட உண்மை அவருக்குத் தெரிகிறது.

90 ஆண்டுகள் தனியாக என்ன செய்வது எனத் தெரியாமல் கிறிஸ் பிராட் தவிக்கிறார். தனது வாழ்க்கை வீணாகி விட்டதே என சோகமாகிறார். தனிமையில் தவிக்கும்போது சில நேரங்களில் கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பலாமா? என யோசிக்கிறார். இப்படியே ஒரு வருடம் செல்கிறது.

தனிமையில் தவிக்கும் கிறிஸ் பிராட் ஒரு கட்டத்தில் துணிந்து கதாநாயகி ஜெனிபர் லோபஸை எழுப்பி விடுகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றனர். இதற்கிடையில் ஜெனிபர் லோபஸ்-கிறிஸ் பிராட் இடையே காதல் மலர்கிறது.

இறுதியில் விண்கலத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அந்த உலகத்துக்கு சென்றனரா? தன்னை உறக்கத்தில் இருந்து எழுப்பியது யார் என்ற உண்மை நாயகி ஜெனிபருக்குத் தெரிந்ததா? தான் எழுந்ததற்கான காரணத்தை கதாநாயகன் கிறிஸ் பிராட் கண்டுபிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

குறைவான கதாபாத்திரங்கள் என்றாலும் இயக்குனர் மோர்டென் டில்டம் கதையை ரசிகர்களுக்கு போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். கிறிஸ் பிராட், ஜெனிபர் லோபஸ் இருவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். ரோட்ரிகோ பிரிட்டோவின் ஒளிப்பதிவும், தாமஸ் நியுமேன் இசையும் படத்திற்கு பக்கபலம்.

மொத்தத்தில் இந்த ‘பாசஞ்சர்ஸ்’ பயணம் இனிதானது…

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online