8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷாலுடன் ஜோடி சேரும் நயன்தரா?

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட டாப் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நயன்தாரா. தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் பிசியாக இருக்கும் நயன், தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளதால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

குறிப்பாக ஹீரோயின் சார்ந்த கதைகளில் அதிகமாக நடித்து வரும் நயன்தாரா தற்போது, ‘அறம்’, ‘டோரா’, ‘கொலையுதிர் காலம்’, ‘நேர் வழி’, ‘இமைக்கா நொடிகள்’ மற்றும் 2 பெயரிடப்படாத படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நயன்தாரா விஷாலுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஷாலும், நயன்தாராவும் ‘சத்யம்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விஷால் படத்தில் நயன்தாரா நடிப்பதாக வெளிவந்துள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இணையும் படத்தை சாக்ரடீஸ் இயக்கவுள்ளார். இவர் ஏற்கெனவே சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த ‘பிரம்மன்’ படத்தை இயக்கியவர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷால் தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து, ‘இரும்பு திரை’, ‘சண்டக்கோழி 2’ படங்களில் நடிக்க உள்ளார். அதன்பிறகு, சாக்ரடீஸ் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries