மீண்டும் அதர்வா ஜோடியான ஸ்ரீதிவ்யா

ஈட்டி’ படத்தில் ஜோடியாக வலம்வந்த அதர்வா – ஸ்ரீதிவ்யா மீண்டும் மற்றொரு படம் ஒன்றில் ஜோடி சேர்ந்துள்ளனர். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.

தெலுங்கில் இருந்து வந்தாலும் தமிழ் பட உலகில் பேசப்படும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீதிவ்யா. தற்போது ஜீவாவுடன் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்து ‘ஒத்தைக்கு ஒத்த’ படத்தில் அதர்வாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஏற்கனவே `ஈட்டி’ படத்தில் அதர்வாவுடன் நடித்த ஸ்ரீதிவ்யா, இப்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் பர்னீஷ், `ஒத்தைக்கு ஒத்த’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிகர்கள் தியாகராஜன், நரேன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சண்டை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து இப்படத்தின் கதையை பர்னீஷ் அமைத்திருக்கிறார்.

அதர்வா தற்போது ‘செம போதை ஆகாதே’, ‘ருக்குமணி வண்டி வருது’, ‘இமைக்கா நொடிகள்’, ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online