சகரிகா கட்ஜ்க்கு கிரிக்கெட் வீரர் ஜாகீர் கானுடன் நிச்சயதார்த்தம்: விரைவில் திருமணம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சகரிகா கட்ஜ். இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியை மையமாக வைத்து கடந்த 2007-ல் இந்தியில் வெளியான `சக் தே இந்தியா’ படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த அவர், பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

இதையடுத்து, குறுகிய இடைவெளியில் படங்களில் நடித்து வந்த அவர், மராத்தியில் ஒரு படத்திலும், குஜராத்தியில் ஒரு படத்திலும் நடித்துள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் `இரடா’ என்ற படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் கட்ஜீக்கும், பிரபல கிரிக்கெட் வீரரான ஜாகீர் கானுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இருவருமே சில வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது நாம் அறிந்ததே. மேலும் பொது இடங்களிலும், நிகழ்ச்சிகளிலும் ஒன்றாகவும் வலம் வருகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற யுவராஜ் சிங் – ஹசல் கீச் திருமணத்தின் போதும் இருவரும் ஒன்றாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜாகீர் கான் – சகரிகா கட்ஜ் திருமண நிச்சதார்த்தம் நேற்று நடைபெற்றதாக இருவரும் அவர்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries