சிம்பு இசைக்கு அமெரிக்காவில் நடனமாடும் சந்தானம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் காமெடியனாக அறிமுகமான சந்தானம், தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நாயகனாக நடித்தும் வருகிறார்.

இதில், ஆனந்த் பால்கி இயக்கத்தில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தில் தன்னுடைய காட்சிகளை நடித்து முடித்துவிட்ட சந்தானம், அடுத்ததாக ‘சக்கபோடு போடு ராஜா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் – புதுமுக நாயகி வைபவி நடிக்கும் படம் ‘சக்கபோடு போடு ராஜா’. இந்தப் படத்தை விடிவி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஓப்பனிங் சாங்கை அமெரிக்கா, ஜார்ஜியா உள்ளிட்ட முன்னணி நாடுகளில் படமாக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

இப்படத்தை முடித்த பிறகு செல்வராகவன் இயக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்துக்காக சந்தானம் போலந்து செல்கிறார். அங்கு, சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்தில் நடிக்கும் சந்தானம், அதன்பிறகு ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online