தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரம் ஆதிஷ்பிரவின் நடிகர் விஜய்யுடன் சந்திப்பு

மத்திய அரசு 2017-ம் ஆண்டிற்கான மலையாள திரைப்படத்தின் சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஆதிஷ்பிரவினை தேர்வு செய்தது.

விருது அறிவிக்கப்பட்டவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த ஆதிஷ்பிரவின் எனக்கு இந்த விருது கிடைத்ததை விட நடிகர் விஜயை சந்திக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வாழ்நாள் லட்சியம் என்று பேட்டி அளித்தார்.

இது விஜய் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. விஜய் உடனே ஆதஷ் பிரவினை நேரில் அழைத்து வருமாறு கூறினார்.

ஆதிஷ்பிரவின் உடனடியாக சென்னைக்கு வந்து விஜயை சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மலையாளத்தில் உரையாடினார்கள். பின்னர் விஜய்யுடன் ஆதிஷ்பிரவின் செல்பி எடுத்துக் கொண்டார்.

தனது வாழ்நாள் லட்சியம் நிறைவேறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஆதிஷ் பிரவின் மேன்மேலும் பல விருதுகளை வென்று வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய விஜய் வாழ்த்து தெரிவித்தார்.

ஆதிஷ்பிரவினுடன் அவரது தாயார் மற்றும் கேரளாவில் உள்ள விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வந்திருந்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online