சண்டைக் காட்சியின் போது காயத்தில் சிக்கிய ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் நடிகராக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் ஜி.வி.பிரகாஷ். அவரது கைவசம் பல படங்கள் உள்ளன. தொடர்ந்து பல படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி வருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `புரூஸ் லீ’ ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில், அவர் தற்போது ‘நாச்சியார்’, ‘அடங்காதே’, ‘ஐங்கரன்’, ‘செம’, ‘4ஜி’, ‘குப்பத்துராஜா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘குப்பத்துராஜா’ படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சியின் போது ஏற்பட்ட விபத்தில் ஜி.வி.பிரகாஷ்-க்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கவசங்கள் அணியாமல் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது, இந்த விபத்து ஏற்பட்டதாக படக்குழு தரப்பு கூறியிருக்கிறது.

சைக்கிளில் செல்வது போன்ற ஒரு காட்சியும், மேல்மாடி கூரைகளின் மேல் ஏறி ஓடும்படியான காட்சியும் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில் மாடி கூரையின் மீதிருந்து எடுக்கப்பட்ட காட்சியில், ஜி.வி.பிரகாஷ் கீழே விழுந்ததில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீவிரமான காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் பணியாற்றி வருகிறார். பாபா பாஸ்கர் இயக்கும் இப்படத்தில் ஜி.வி. உடன் இணைந்து பார்த்திபன், பலக் லல்வானி, பூனம் பாஜ்வா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ஜி.வி. அடுத்ததாக, ராஜுவ் மேனனின் `சர்வம் தாள மயம்’, சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படம், வெற்றிமாறன் இயக்கத்தில் மற்றொரு படம், சீமான் இயக்கத்தில் `பகலவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளார். இதையடுத்து எழில் இயக்கத்தில் தெலுங்கு ரீமேக் படம் ஒன்றிலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries