ரூ.1000 கோடியை எட்டி உச்சம் தொட்ட ‘பாகுபலி-2’

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.

இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது. படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா? என்பது சந்தேகம்தான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries