`பாகுபலி’க்கு போட்டியாக சீனாவில் ரூ.90 கோடியை அள்ளிய `தங்கல்’

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகி பல்வேறு சாதனைகளை படைத்து வரும் படம் `பாகுபலி-2′. `பாகுபலி’ படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ரிலீசானது.

`பாகுபலி’ படத்தின் முதல் பாகம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.650 கோடி வசூலித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள `பாகுபலி-2′, ரிலீசாகிய 10 நாட்களில் ரூ.1227 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவில் மட்டும் `பாகுபலி-2′-ன் வசூல் வேட்டை ரூ.850 கோடியை தாண்டி தொடர்கிறது.

இதுஒருபுறம் இருக்க நித்தேஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ‘தங்கல்’ படம் சீனாவில் டப் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியானது.

வெளியாக 4 நாட்களில் சீனாவில் மட்டும் `தங்கல்’ ரூ.90.60 கோடியை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படத்தின் மொத்த வசூல் ரூ.803 கோடியாக உயர்ந்துள்ளது.

விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.375 கோடிகளை வசூலித்து இந்திய வசூலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries