அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா? ரஜினிக்கு சேரன் கேள்வி

ரஜினி தான் அரசியலுக்கு வருவது குறித்து நேற்று சூசகமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அவருடைய அரசியல் பிரவேசம் குறித்து பலரும் தங்களது பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அரசியல் வட்டாரத்தில் ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்று பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான சேரன், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, வணக்கம் சார். உங்களை முதல்வர் ஆக்கியே தீருவார்கள். அரசியல் சூழல் அதை உருவாக்கும். மக்களிடமும் நேர்மை குறைந்துள்ளதால் ஜாக்கிரதை. களவும் ஊழலும் லஞ்சமும் சுயநலமும் நேர்மையின்மையும் சூழ்ந்த இந்த அரசியல் உங்களுக்கு ஒத்துவருமா?

உங்களுக்கு பொய்யே பேசவராதே. கர்நாடகாவை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை ஆதரிக்ககூடாது, இலவசங்கள் கொடுத்தே ஆகவேண்டும், மதுக்கடைகள் மூடக்கூடாது என சவால்கள் நிறைய.

நீங்கள் நினைப்பது நடக்கவேண்டுமெனில் மக்களோடு களமிறங்குங்கள், கலந்து பேசுங்கள். ஏரியா வாரியாக பிரச்சினைகளை தெரிந்துகொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries