சூப்பர் ஸ்டாரை விமர்சித்த கஸ்தூரிக்கு ரஜினி ரசிகர்கள் தக்க பதிலடி

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சென்னைக்கு அழைத்து 5 நாட்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அப்போது ரசிகர்கள் மத்தியில் அரசியல் பிரவேசம் குறித்து அதிரடியான கருத்துக்களை வெளியிட்டார்.

அவர் பேசும்போது, “என் வாழ்க்கை கடவுள் கையில் இருக்கிறது. எதிர்காலத்தில் என்னவாக நான் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அது நடக்கும். ஒரு வேளை நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்கமாட்டேன்” என்றார்.

“நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்கினால் தான் நாடு உருப்படும். ரசிகர்கள் ஊருக்கு சென்று அவரவர் கடமைகளைச் செய்யுங்கள். போர் வரும்போது பார்த்துக்கொள்வோம்” என்றும் கூறினார்.

ரஜினிகாந்தின் அரசியல் பேச்சை நடிகை கஸ்தூரி விமர்சித்து உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “போர் போர் அப்படின்னு கேட்டு போரடிக்குது. அக்கப்போர். நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருட கணக்கில் யோசிப்பவர்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.

கஸ்தூரி பதிவிட்டுள்ள கருத்துக்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கஸ்தூரியை பதிலுக்கு கடுமையாக திட்டி டுவிட்டரில் கருத்துக்கள் வெளியிட்டனர்.

“நீயெல்லாம் தலைவர் பற்றி பேசுகிறாய் பாரு. மூடிட்டு போ” என்று ஒரு ரசிகர் கண்டித்தார்.

அவருக்கு பதில் அளித்த கஸ்தூரி “நீ பொறக்குறதுக்கு முன்னாடி நான் அவரு ரசிகைடா. உன்னை மாதிரி மரியாதை கெட்ட ரசிகர்களால் அவருக்கு அவமானம்தான். நீ மூடு மொதல்ல” என்று பதிவிட்டார்.

இன்னொரு ரசிகர், “ரஜினி சார் உலகம் முழுவதும் பலகோடி மக்களின் இதயத்தில் வாழ்கிறார். அவரை சினிமா துறையிலிருந்து கொண்டே விமர்சனம். செய்றீங்களே எவ்வளவு கேவலம்” என்று பதிவிட்டார்.

அவருக்கு பதில் அளித்த கஸ்தூரி, “நான் அதிதீவிர ரஜினி ரசிகை. இப்ப பேசினது விமர்சனம் இல்ல. விரக்தி. எல்லார் மனசுலயும் இருக்கிற ஆதங்கத்தைத்தான் சொல்லி இருக்கேன்” என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் “ரஜினியை வைத்து விளம்பரம் தேடும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர்” என்று கூறியுள்ளார். கஸ்தூரிக்கும், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும் டுவிட்டரில் நடக்கும் மோதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries