வயதான நாயகிகளை யாரும் கண்டு கொள்வதே இல்லை: ஹேமமாலினி ஆதங்கம்

இந்தி பட உலகின் கனவுக்கன்னியாக இருந்த ஹேமமாலினிக்கு வயது 68. தற்போது அவர் அரசியலில் இருக்கிறார். அம்மா, பாட்டி வேடங்களில் நடித்து வருகிறார். என்றாலும், முக்கிய வேடங்களில் நடிக்கவில்லை. இது பற்றி கூறிய ஹேமமாலினி….

“இப்போதும் என்னைப் போன்ற வயதுடைய நடிகைகளால் முழு படத்தையும் தோளில் தாங்க முடியும். இதை நம்ப மறுக்கிறார்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. தற்போது என் வயது நடிகைகளை மையமாக வைத்து யாரும் படம் எடுக்க விரும்புவதில்லை.

மாதுரி தீட்சத்,ஜுஹி சால்வா, பிரீத்திஜிந்தா ஆகியோரை ஏன் ஹீரோயின்களாக பார்க்க முடிவதில்லை. இதற்கு இந்தி பட உலக இயக்குனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். ஆண்களுக்கு வயதானாலும் கூட அவர்கள் விரும்பும் வரை ஹீரோக்களாகவே நடிக்கிறார்கள். ஆனால் நடிகைகளுக்கு இளமையாக இருக்கும் வரை தான் மவுசா?” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online