மீண்டும் ரசிகர்களை சந்திக்க திட்டமிட்டுள்ள ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் புதிதாக உருவாகிவரும் படம் ‘காலா’. இப்படத்தை தனுஷ் தயாரிக்க பா.ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக ரஜினி கடந்த மாதம் மும்பை சென்றார். மே 28-ந்தேதி முதல் அங்கு தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.

படப்பிடிப்பில் ரஜினி கலந்துகொண்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு ரஜினி இன்று சென்னை திரும்பினார். மீண்டும், அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக வருகிற ஜுன் 24-ந் தேதி மீண்டும் மும்பை செல்லவிருக்கிறார்.

சென்னை திரும்பிய ரஜினி இன்னும் 2 மாதங்களுக்குள் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். கடந்த மாதம் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினி, தான் அரசியலுக்கு வருவது குறித்து பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online