அதிக எடைகொண்ட திரௌபதி அம்மன் சிலையை சுமந்துகொண்டு ஊரை சுற்றிவந்த உதயநிதி

உதயநிதி நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’. இப்படத்தை தளபதி பிரபு என்பவர் இயக்கி வருகிறார். முதன்முறையாக இப்படத்தில் உதயநிதியுடன் சூரி கைகோர்த்திருக்கிறார்.

மேலும், பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க மயில்சாமி, நமோ நாராயணன், சுந்தர், ரமா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் உதயநிதி முழுக்க முழுக்க ஒரு கிராமத்து இளைஞனாக நடிக்கிறார். இப்படத்தின் ஒரு காட்சியில் அதிக எடை கொண்ட திரௌபதி அம்மன் சிலையை உதயநிதி தலையில் சுமந்துகொண்டு, காலில் செருப்பு அணியாமல் கிராமத்தை சுற்றி வந்து நடித்துக் கொடுத்துள்ளார்.

நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோவில், திருவிழா, சம்பிரதாயங்கள் மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பிரம்மாண்ட திருவிழா செட் அமைத்து, இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஐந்து நாட்கள் மதுரை, தேனியில் இந்த காட்சியை படமாக்கியுள்ளார்கள்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனைத்து பாடல்களையும் யுகபாரதி எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online