MENUMENU

ஸ்பைடர்மேன் ஹோம்கமிங் – திரை விமர்சனம்

கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்’ உருவாகியிருக்கிறது.

அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.

இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.

அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது.

இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.

ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.

ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ்.

ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.

மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.

மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்’ காமெடி சீரியஸ்

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online